• waytochurch.com logo
Song # 27215

கொல்கதா மேட்டினிலே கொடூர பாவி எந்தனுக்காய்


பாவ சாபங்கள் சுமந்தாரே

பாவியை மீட்க பாடுபட்டார்

பாவமில்லாத தேவகுமாரன்

பாதகன் எனக்காய் தொங்கினார் - கொல்
மடிந்திடும் மன்னுயிர்க்காய்

மகிமை யாவும் இழந்தோராய்

மாசில்லாத தேவ குமாரன்

மூன்றாணி மீதினில் தொங்கினார் - கொல்
இரத்தத்தின் பெரு வெள்ளம் ஓட

இரட்சிப்பின் நதி என்னில் பாய

ஆதரவில்லா தேவ குமாரன்

ஆகோரக் காட்சியாய் தொங்கினார் - கொல்
கல்வாரி காட்சி இதோ

கண்டிடுவாயே கண் கலங்க

கடின மனமும் உருகிடுமே

கர்த்தரின் மாறாத அன்பிலே - கொல்
உள்ளமே நீ திறவாயோ

உருகும் சத்தம் நீ கேளாயோ

உன் கரம் பற்றி உன்னை நடத்த

உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார் - கொல்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com