கொஞ்ச காலம் இயேசுவிற்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்
அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்
ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் -2
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் - கொஞ்ச
கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்றும் நான் மறைவேன் - 2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச
இந்த தேகம் அழியும் கூடாரம்
அதை நம்பி யார் பிழைப்பார்
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச
வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரiவேற்பு அளிக்கப்படும்
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுகிறார்
எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச
பலியாக காணிக்கையாக
படைத்தேன் உமக்காக ஶி 2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரை
ஏழை நான் என்றும் உம் அடிமை - கொஞ்ச