• waytochurch.com logo
Song # 27228

கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே


ஆருயிர் அன்பராய் எங்களுடனே

ஜீவியப்பாதையிலே இயேசுபரன்

அனுதினமும் வழி நடந்தே

அவரது நாமத்தில் காத்தனரே
எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே

மகிமை சேர்த்தனரே பூரணமாய்

காத்தனரே கர்த்தர் எமை

கருணையினால் தூய சேவை செய்ய
அன்பின் அகலமும் நீளம் உயரமும்

ஆழமும் அறிந்துணர அனுக்கிரகித்தார்

கிறிஸ்துவிலே ஒரு மனையாய்

சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே

நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே

விசுவாசத்தில் நிலைத்திடுவோம்

ஆசையாது அழைப்பினை காத்துக் கொள்வோம்
ஆவியும் மணவாட்டியும் ஆவலுடனே

வாருமென்றழைக்கின்றாரே - வாரும் என்பீர்

சீயோனே நீ பார் உனக்காய்

நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்
வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்

வியாதியும் வேதனையும் - வைத்தியராய்

இயேசுவல்லால் சார்ந்திடவோ

இகமதில் வேறெமக்காருமில்லை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com