• waytochurch.com logo
Song # 27256

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவ முள்ளது


பலவான்களின் புத்திரரே

பரிசுத்த அலங்காரமாய்

கனம், வல்லமை, மகிமை

கர்த்தருக்கே செலுத்திடுங்கள்

பிதாகுமாரன் பரிசுத்தாவியின்

புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்
கேதுரு மரங்களையும்

லீபனோனின் மரங்களையும்

கர்த்தரின் வலிய சத்தம்

கோரமாக முறிக்கின்றது

சேனை அதிபன் தமது முன்னிலை

ஜெய வீரனாக செல்கிறார் - கர்த்தரின்
அக்கினி ஜுவாலைகளை

அவர் சத்தம் பிளக்கின்றது

காதேஸ் வனாந்திரத்தை

கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்

ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்

ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்
பெண் மான்கள் ஈனும்படி

பெலத்த கிரியை செய்திடும்

காட்டையும் வெளியாக்கும்

கர்த்தரின் வலிய சத்தம்

பெலன் கொடுத்து சமாதானமீந்து

பரன் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com