• waytochurch.com logo
Song # 27269

கர்த்தர் சொல்ல ஆகுமே கட்டளையிடவும் நிற்குமே


வானமும் பூமியும் வார்த்தையினாலே

சிருஷ்டித்து காத்திடும் உத்தமரே

சத்திய தேவனே எங்களிலே

சிருஷ்டிக்கும் வல்லமை வெளிப்படுத்தும் - கர்த்தர்
நியாயமும் நீதியும் தரித்தவர் நீரே

காருண்ய வல்லமை நிறைந்தவரே

தளர்ந்திடும்போதும் சோர்ந்திடும்போதும்

தேற்றிடும் வல்லமை வெளிப்படுத்தும் - கர்த்தர்
கர்த்தரின் நினைவுகள் நின்றிடும் என்றும்

அவரது யோசனை உத்தமமே

சகலத்தை அறிந்திடும் எம் தேவனே

ஆளுகை புரிந்திடும் ஜீவியத்தில் - கர்த்தர்
சீடரை தெரிந்துமே பூமியில் எங்கும்

சத்தியம் சாற்றிட அழைத்தவரே

உந்தனின் கட்டளை நிறைவேற்றிட

உன்னத வல்லமை அளித்திடுமே - கர்த்தர்
ஆராய்ந்து அறிந்திடும் தேவன் இவரே

ஆபத்தில் துணையாய் நிற்பவரே

எவ்வித சமய நேரத்திலும்

சந்திக்கும் வல்லமை வெளிப்படுத்தும் - கர்த்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com