• waytochurch.com logo
Song # 27273

கர்த்தர் இயேசு வருவார் நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்


மேகத்தில் தோன்றும் மின்னொளியில்

மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்

தூதர் தொனி ஆரவாரத்துடன்

தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்
ஆண்டவர் ஆழைத்த முதற்பலன்கள்

அமரர் வடிவாய் மாறிடுவோம்

கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப

பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்
தம் மணவாட்டி ஆயத்தமே

துதியே செலுத்தி மகிழ்ந்திடவே

நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்

ஜோதி இலங்கத் தரித்திடுவாள் - கர்த்தர்
நூதன சாலேம் வந்திறங்கும்

நடுவான மீதில் அலங்கரிப்பாய்

ஆட்டுக்குட்டியானவர் விருந்தே

அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்
வெண் குதிரை மேல் ஏறிவந்தே

கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே

உண்மையும் சத்தியம் நிறைந்தே

விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் - கர்த்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com