• waytochurch.com logo
Song # 27275

கர்த்தனை வாழ்த்துகிறேன் அவர் கிருபைகள் என்னிடம் தங்க


சுற்றிலும் Þதோத்திர தொனி கேட்கும்

வெற்றியின் சாட்சி கூறிடுவேன்

இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார்

எத்தனை நாவால் போற்றிடுவேன் - கர்த்தனை
ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்

ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்

கர்த்தரை நம்பியே திடமனதாய்

கடந்திடுவேன் இவ்வாண்டினையும் - கர்த்தனை
யூபிலி ஆண்டு விடுதலையே

இயேசுவின் ஆவி வந்திரங்க

கட்டுகள் யாவும் அகன்றனவே

கலப்பையின் மேல் கை சேவிக்குதே - கர்த்தனை
ஓர் புதுப் பாதை தோன்றிடுதே

ஓங்கும் தம் கைகள் தாங்கிடுதே

கர்த்தரிடம் என் உடன்படிக்கை

காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் - கர்த்தனை
சீக்கிரம் இயேசு வந்திடுவார்

சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே

சீரழியும் இந்த மண்ணுலகம்

சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம் - கர்த்தனை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com