• waytochurch.com logo
Song # 27283

ஒளி தரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம்


மலைமேல் ஜொலித்திடும் மாநகர் போலவே

மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்

ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட

அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம் - ஒளி தரும்
இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்

அருள் நிறை ஒளியினை மேதினி வீசுவோம்

வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே

எழும்பி இப்பாரினில் சுடரை வீசுவோம் - ஒளி தரும்
அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும்

ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம்

சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட

துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம் - ஒளி தரும்
பரிசுத்தவான்களே ஒளியில் வாசமே

சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட

இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே

ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம் - ஒளி தரும்
நானே வெளிச்சமும் நானே வழி என்றார்

அனுதினம் அதிகமாய் அவரை சார்ந்துமே

இயேசுவின் வழியினில் என்றும் நடந்திட

மகிமை ஒளியினை அடைந்து செல்லுவோம் - ஒளி தரும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com