ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி அடிமை சரண் புகுந்தேன்
என் பாவம் போக்க எடுத்தீர் இறைவா
ஈனக்கோலமதை - (2)
என்னதானிதற்கீடு செய்குவேன்
அன்னையே விளம்புவீரே - ஏழை
தூரமாய்க கிடந்தே தொல்லைகளடைந்தே
தூயா உமை மறந்தேன் - (2)
தூக்கினீர் என்னைச் சேற்றினின்றே
தேற்றினீரும்மாவியாலே - ஏழை
விண்ணை நீர் மறந்தீர் விரோதியாமெனையே
விண்ணில் சேர்த்திடவே
வேண்டுதல் கேளும் வேந்தனே
அருள் தேவனே சகாயனே - ஏழை
பாவத்தின் கூலி மரணமாம் பயத்தை
ஜெயித்தவர் யேசுகோமான் - (2)
ஜீவனும் சமாதானமுமீந்து
தேவனின் சமூகமீந்தார் - ஏழை
மாயமாம் உலகின் வேஷத்தை வெறுத்தேன்
மன்னா உன் அன்பினாலே - (2)
சொன்னீரே மகிமையில் சேர்ப்பதாய்
உன்னதா உம் வாக்கை நம்பி - ஏழை