• waytochurch.com logo
Song # 27291

எழும்பிடுவீரே வாலிபரே எடுத்திடுவீர் சிலவை கொடியை


பாவ பாரம் நீக்கி இளைப்பாறுதல் தந்தார்

சாப ரோகம் நீக்கி சுத்தமாக்கினார்

இரட்சிப்பின் வஸ்திரம் எனக்குத் தந்தார்

நீதியின் சால்வை எனக்களித்தார் - விசுவாசத்தாலே
பரிசுத்த ஆவியின் வல்லமை தந்தார்

பரிசுத்த ஜீவியம் காணச் செய்தார்

அந்நிய பாஷைகளைப் பேசச் செய்தார்

தேவாவியாலே அபிஷேகித்தார் - விசுவாசத்தாலே
சாத்தானின் மேல் அதிகாரம் தந்தார்

பாவங்கள் ஜெயிக்க வல்லமை தந்தார்

தேனினும் இனிய வேதம் தந்தார்

தாயினும் மேலாய் நம்மைத் தேற்றுவார் - விசுவாசத்தாலே
மேகங்கள் மீதினில் வந்திடுவாரே

மறுரூபமாக்கி நம்மை அழைத்துச் செல்வார்

ஆயிரம் வருட அரசாட்சியில்

ஆயத்தமாக நீயும் ஓடி வா - விசுவாசத்தாலே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com