என்மீட்பர் சென்ற பாதையில் நீ செல்ல ஆயத்தமா
ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா - சிலுவையை
தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா - சிலுவையை
பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடன்பட
மெய்யுத்தஞ் செய்வாயா - சிலுவையை
லோகத்தார் மாண்டு போகிறார்
மெய்வீரர் இல்லாமல்
பார்! மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில் - சிலுவையை
வாழ்நாள் எல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன் - சிலுவையை