• waytochurch.com logo
Song # 27302

என்னை ஆளும் இயேசு நாதா எந்தன் ஆவி ஆத்மா சரீரம்


அதிகாலை தோறும் என்னை எழுப்பி

அறிவை ஊட்டி நிரப்புவீர்

இளைத்தவருக்கு ஏற்ற சமயம்

இனிய வாக்கை தந்தருளும் - என்னை
இருளின் அதிகாரத்தினின்றென்னை

அருள் ஒளியினுள் அழைத்தீரே

அப்புக் குமாரனின் இராஜ்ஜியமதில்

இன்பமுடனே பங்களித்தீர் - என்னை
எனது சுதந்திரம் பங்குமானீர்

எனது உள்ளம் பூரிக்குதே

ஆறுதல் தேறுதல் அல்லும் பகலும்

ஆலோசனைகளுமளித்தீர் - என்னை
எரியும் விளக்கில் எண்ணையும் ஊற்றும்

எரிந்து நானும் பிரகாசிப்பேன்

மலைமேல் பட்டணம் மறைந்திடுமோ

மங்கிடாதென்றும் உம் மகிமை - என்னை
நீரோடைகளை வாஞ்சிக்கும் மான்போல்

நித்தம் என் ஆத்மா கதறுதே

வரண்டு விடாய்த்த என் இதயத்தில்

வற்றாத ஊற்றாய்ப் பாய்ந்திடுவீர் - என்னை
சமாதானத்தின் தேவனே வருவீர்

சத்திய வாக்குத் தவறிடீர்

விரைந்து பறந்து கர்த்தரைக் காண

விஸ்வாசத்தோடு தைரியம் கொள்வேன் - என்னை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com