என்ன தியாகம் என் கல்வாரி நாயகா என்னையும் உம்மைப் போல் மாற்றிடவோ
விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
விட்டிறங்கி வந்தீரே
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித் தீரைய்யா
மானிடர் மேல் அன்பினால் - என்ன
ஜெனித்த நாள் முதலாய் - கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரைய்யா
பாவியை மீட்பதற்காய் - என்ன
தலையைச் சாய்த்திடவோ உமக்கு ஓர்
ஸ்தலமோ எங்குமில்லை
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ
முன் பாதைக் காட்டினீரே - என்ன
பாடுகளல்லவோ உம்மை மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்
என் ஜீவனையும் வைத்தே - என்ன
இன்பம் எனக்கினியேன் என் அருமை
இயேசு தான் என் பங்கல்லோ
நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
பாசம் என்னில் வைத்ததால் - என்ன