என்ன செய்வேன் இயேசுபரா என்னில் நீர் செய்த வன் கிரியைகட்காய்
பாவச்சேற்றில் ஆழ்ந்திருந்தேன்
பரிவாய் கரம் நீட்டி கரையேற்றினீர்
சிந்திய இரத்தத்தால் கழுவினீரே
மந்தையில் சேர்த்தீரே மைந்தனாக 
 மிஞ்சும் நோயால் பெலன் இழந்தேன்
எந்தையே தந்தீரே விந்தை பெலன்
அகமதில் பெலன் தந்தீர் உம்மைத் துதிக்க
இகமதில் உம்மைப்பாட பாடல் தந்தீர் 
 சத்துரவை நான் ஜெயித்து
சுத்தனாய் சித்தமே செய்ய செய்தீர்
சத்திய பரனே நித்தியரே
நித்தமும் பாடுவேன் உம் புகழை 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter