• waytochurch.com logo
Song # 27309

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்


வானமும் பூமியும் படைத்த

வல்ல தேவனிடமிருந்தே

எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே

என் கண்கள் ஏறெடுப்பேன் - எனக்கொத்தாசை
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்

நிலைமாறி புவியகன்றிடினும்

மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்

ஆறுதல் எனக்கவரே - எனக்கொத்தாசை
என் காலைத் தள்ளாட வொட்டார்

என்னைக் காக்கும் தேவன் உறங்கார்

இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்

இராப்பகல் உறங்காரே - எனக்கொத்தாசை
வலப்பக்கத்தில் நிழல் அவரே

வழுவாமல் காப்பவர் அவரே

சூரியன் பகலில் சந்திரன் இரவில்

சேதப்படுத்தாதே - எனக்கொத்தாசை
எத்தீங்கும் என்னை அணுகாமல்

ஆத்துமாவைக் காக்குமென் தேவன்

போக்கையும் வரத்தையும் பத்திரமாக

காப்பாரே இது முதலாய் - எனக்கொத்தாசை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com