• waytochurch.com logo
Song # 27322

என் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்


சுக செல்வ மகிமை பெருமையிbங்கும்

இன்பம் தரும் பொருள் காணேன்

தாகம் பெருகும் தண்ணீரேயின்றி

லோகம் வேறொன்றும் நல்காதே - என்
ஆபத்து காலத்தில் அனுகூலமான

துணையும் நீர் பெலனுமே நாதா

ஆகையால் பூமி நிலை மாறினாலும்

அஞ்சேன் கடல் பொங்கினாலும் - என்
பாழ்மணல் பாதையில் உரியும் வெயிலின்

பரனே உம் கிருபையின் நிழலில்

பாடி மகிழ்வேன் குரசில் புகழ்வேன்

பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன் - என்
என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து

பரதேச யாத்திரை செய்வேன்

பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்

பாரங்கள் ஏதும் நானறியேன் - என்
உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்

உலகின் வினைகள் மறப்பேன்

உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்

பெருகும் என் இதயத்தின் இன்பம் - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com