என் அருள் நாதா இயேசுவே சிலுவைக் காட்சி பார்க்கையில்
என் மீட்பர் சிலுவையல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன் 
 கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பு கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே 
 மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter