என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் நீர்தான்
உலகினிலே உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
உள்ளத்திலே உம்மையல்லால்
வேறொரு ஆசையில்லை 
 உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்லை
என் நேசர் நீரல்லவோ
என் பாக்கியமே 
 உலகினிலே உம் அன்பை போல
உண்மை அன்பு இல்லை
உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனைத் தந்தீரே 
 உம்மையே நான் என்முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான் 
 இதயத்திலேயே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
பொன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதைய்யா 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter