• waytochurch.com logo
Song # 27333

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே உந்தன் மகிமை என்று காணுவேன்


பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே

பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே

துதிக்க பதினாயிரம் நாவு வேண்டுமே

துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே - எந்தன் வாஞ்சை
மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே

மங்கள் கீதங்கள் அங்கு முழங்குமே

சீருடை தரித்த கெம்பீர சபையோர்

சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே - எந்தன் வாஞ்சை
வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு

வனப்புடன் நிற்கும் சீயோனே

இயேசு ராஜாவின் சத்திய நகரமே

சிலுவையே உந்தன் அஸ்திபாரமே - எந்தன் வாஞ்சை
பரிசுத்தமே எழில் எல்லையே

பரம தேவனின் வாசஸ்தலமே

பரிசுத்த வான்கள் பலகோடி வாழும்

பரலோகமே இன்ப சீயோனே - எந்தன் வாஞ்சை
மணவாளம் என் இயேசு ராஜன் அங்கே

மணவாட்டியாம் தம் சபைக் கெனவே

ஆயத்தப்படுத்தின உன்னிடமே

எப்போது நான் வந்து சேர்வேனோ? - எந்தன் வாஞ்சை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com