• waytochurch.com logo
Song # 27337

எந்தன் உள்ளத்தில் புது உணர்வு எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி


கதரேனரின் கடந்கரையில்

கல்லறையிடை வாசம் செய்த

பொல்லா ஆவி மனிதன் நாதர் பாதம் பணிய

நல்ல அற்புத மாற்றம் பெற்றான் - புதுவாழ்வு
ஓடையில் உருண்டோடி வரும்

சின்ன கற்களும் வடிவம் பெறும்

செல்ல தாவீதுக்கு கோலியாத்தை வீழ்த்த

வல்ல ஆயுதமாகிவிடும் - புதுவாழ்வு
சிலுவை நிழல் வந்திட்டேனே

இயேசுவின் கரம் பற்றிட்டேனே

எந்தன் இயேசுவுடன் கொண்ட உறவு என்னை

புது வடிவாய் திகழச் செய்யும் - புதுவாழ்வு
காட்டத்தி மரம் ஏறி ஒளிந்த

அந்த சகேயுவும் மாற்றம் பெற்றான்

உள்ளபடி யாவும் நாதரிடம் அறிக்கை செய்தான்

வெள்ளம் போன்றுள்ளம் பூரிப்படைந்தான் - புதுவாழ்வு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com