• waytochurch.com logo
Song # 27339

எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்


அற்புதமாய் அவர் அன்பு

அண்டினோர் காக்கும் தூய அன்பு

இப்பூவினில் இவரைப் போல் அன்பர் எவருண்டு

மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் - எந்தன்
சர்வ வல்ல தேவனிவர்

சாந்தமும் தாழ்மை உள்ளவராம்

எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்

நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை - எந்தன்
குற்றங்களை மன்னித்தவர்

தம்மண்டை என்னைச் சேர்த்துக் கொண்டார்

எந்தன் நேசர் ஒப்பற்றவர் பொறுமை நிறைந்தவர்

சார்ந்திடுவேன் இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் - எந்தன்
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்

சீரான பாதை நடத்திடுவார்

எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நடத்துவார்

எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன் - எந்தன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com