எந்தன் இயேசு எனக்கு நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர்
கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே - என்
வேதனை யாவையும் நீக்கி என்னில் ஶி புது
ஜீவனை ஊற்றினதால் - எந்தன்
அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிகச் சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரே - எந்தன்
புவி யாத்திரை மிகக் கடினம்
தேவக் கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினி ஸ்தம்பம்
அநுதினம் என்னை வழி நடத்தும் - எந்தன்
எந்தன் ஏக்கமெல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன் - எந்தன்