• waytochurch.com logo
Song # 27341

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன்


ஆதியும் நீரே - அந்தமும் நீரே

ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே -எந்த
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே

தாபரம் நீரே - என் தாரகம் நீரே -எந்த
வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே

வாதையில் நீரே- என் பாதையில் நீரே - எந்த
வானிலும் நீரே - பூவிலும் நீரே

ஆழியில் நீரே- என் ஆபத்தில் நீரே - எந்த
துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே

இன்னல் வேளையில் மாறாதவர் நீரே - எந்த
ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே

ஆத்ம நேசராம்- நண்பரும் நீரே - எந்த
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே

ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே - எந்த

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com