• waytochurch.com logo
Song # 27350

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்


அந்த நாள் மிக சமீபமே

சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே

தேவ எக்காளம் வானில் முழங்க

தேவாதி தேவனை சந்திப்போமே - எக்காள
வானமும் பூமியும் மாறிடினும்

வல்லவர் வாக்குதாம் மாறிடாதே

தேவ தூதர் பாடல் தொனிக்க

தேவன் அவரையே தரிசிப்போமே - எக்காள
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்

விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்

கண்ணீர் கவலை அங்கே இல்லை

கர்த்தர் தாமே வெளிச்சமாவார் - எக்காள
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்

கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்

பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்

பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் - எக்காள
கள்ளர்கள் பரவி அங்குமிங்கும்

கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார்

கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்

கருத்துடன் நாம் விழித்திருப்போம் - எக்காள

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com