• waytochurch.com logo
Song # 27352

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே


மண்ணின் வாழ்வும் மாயையாகும்

மனிதன் காண்பது பொய்யாகும்

மாறிடா நேசர் இயேசவே

மாறாத அன்பு என்றும் போதுமே - எக்
அலைகள் மோதி எதிர்வந்தாலும்

கலங்கிடேனே வாழ்க்கையிலே

அசையா எந்தன் நம்பிக்கை (2)

நங்கூரம் எந்தன் இயேசு போதுமே - எக்
அவரை நோக்கி ஜெபிக்கும் போது

அருகில் வந்து உதவி செய்வார்

கைவிடாமல் கருத்துடன் (2)

காத்தென்னை என்றும் நடத்திடுவார் - எக்
தேவ பயமே ஜீவ ஊற்று

மரண கண்ணிக்கு விலக்கிடுமே

தேவ பாதையில் நடந்திட(2)

தேவாவியானவர் உதவி செய்வார் - எக்
முன்னறிந்து அழைத்த தேவன்

முடிவு வரையும் நடத்திடுவார்

தேவ சாயலாய் மாறியே

தேவாதி தேவனை தரிசிப்போமே - எக்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com