உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே
ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே - நான் - உம்
உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே - நான் - உம்
பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே - நான்
வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே - உம்
ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே - நான் - உம்