உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே உம் கிரியைகள் அதிய மானதே
என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர்
என் நிறைவுகளையும் தூரத்தில் அறிவீர்
என் நாவினிலே சொல் பிறவா முன்னமே
என் தேவனே அவை யாவும் அறிவீர் - உம்மை
உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகலைப்போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என் மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே - உம்மை
என்னைச் சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனைவழி - என்னின்று அகல
நித்திய வழி எனை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட - உம்மை