உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா - 2
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதய்யா -2
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
உமது அன்மை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்ய நாதரே - 2
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே