உம் பீடத்தை சுற்றி சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட
உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன் - என் தெய்வமே
உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன் - என் தெய்வமே
கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன் - என் தெய்வமே