இராஜரீக கெம்பீரத் தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை
சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாய்
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றார் - மெய்
செங்கடல் நடுவிலே நடத்தினார்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
கடலைப் பிளந்து நதியைப் பிரித்து
காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் - மெய்
தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்ந்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்
பரிசுத்த வான்களே கெம்பீரிப்போம் - மெய்
பரலோக வாசிகள் சுதேசிகள்
பரதேசிகள் சில சீஷர்கள்
பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் - மெய்
ஜெபமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஆவியில் ஜெபிப்போம் அள்புதங்கள் காண்போம்
ஆச்சரியமாகவே நடத்துவார்
குணசாரிகள் கூடார வாசிகள்
கூட்டமாகவே கூடச் சேரவே
மணவாளனை நம் மன்னன் ஏசுவைத் தம்
மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் - மெய்