• waytochurch.com logo
Song # 27393

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே


பெலத்தின் மேலே மா பெலனே

புது பெலன் நாம் பெற்றிட

சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்

சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் - இரட்டிப்
கிருபையின் மேல் மா கிருபை

கர்த்தரிடம் நாம் பெற்றிட

ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்

ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் - இரட்டிப்
ஜெயத்தின் மேலே மா ஜெயமே

ஜெயதொனியாய்ப் பெற்றிட

போர் முனையில் சிறு தாவீது போல்

போர் வீரராக என்றும் ஜெயிப்போம் - இரட்டிப்
நம்பிக்கையின் மேல் நம்பிக்கை

நல் விசுவாசம் பெற்றிட

ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த

அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம் - இரட்டிப்
பரிசுத்தம் மேல் பரிசுத்தம்

பங்கமில்லாமல் பெற்றிட

நீதியின் சூரியன் ஏசுவுடனே

நீதி அணிந்து என்றும் ஆளுவோம் - இரட்டிப்
மகிமையின் மேல் மா மகிமை

மறுரூபம் நாமம் பெற்றிட

கண்ணிமை நேரத்திலே பறந்தேகி

கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் - இரட்டிப்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com