இரட்சா பெருமானே பாரும் புண்ணிய பாதம் அண்டினோம்
மேய்பன் மேல் முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர் 
 நீதிப் பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர் 
 ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter