இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் அவர் செய்த கிரியை தானும் செய்வான்
தமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
நாதனின் நல்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம் - மாற்றி
கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
வல்ல நல் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழச் செய்திடுமே - மாற்றி
இயேசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார் - மாற்றி
தேவ எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தோடே தோன்றிடுவார்
ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி ஏகிடுவோம் - மாற்றி