• waytochurch.com logo
Song # 27403

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா


பாவக் கொடுமையால் நாவறண்டபோது

பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி - 2

கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார்

இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் - இயேசுவே
தாயென்னை மறந்து தள்ளினபோது

தகப்பன் வெறுத்து பகைத்த போதும் - 2

ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு

ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார் - இயேசுவே
உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம்

உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம் - 2

பக்கமாய் நின்று தேற்றிடுவாரே

பரிதபித் தன்பாய் வேண்டிடுவாரே - இயேசுவே
அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு

அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார் - 2

எனக்கும் நீதான் எல்லாமுமென்றார்

தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார் - இயேசுவே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com