• waytochurch.com logo
Song # 27410

இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்


மாந்தர் போற்றும் நாமம் - விண்

தூதர் வாழ்த்தும் நாமம்

பூவுலகோர் போற்றும்

மேன்மையான நாமம் - இயேசு
பாவம் போக்கும் நாமம் - தூய

வாழ்வளிக்கும் நாமம்

நித்திய ஜீவன் அருளும்

ஈடில்லாத நாமம் - இயேசு
பேய் நடுங்கும் நாமம் - கடும்

நோய் அகற்றும் நாமம்

நேற்றும் இன்றும் என்றும்

மாறிடாத நாமம் - இயேசு
இனிமை தங்கும் நாமம் - தீய

இன்னல் மாற்றும் நாமம்

இருளின் பயங்கள் நீக்கும்

ஈடில்லாத நாமம் - இயேசு
சாவை வென்ற நாமம் - பாவ

சாபம் போக்கும் நாமம்

சர்வ வல்ல நாமம்

இயேசுவின் நாமமே - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com