• waytochurch.com logo
Song # 27415

இயேசுவின் நாமம் அதிசயமாமே என்றென்றும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்


காடு மலையும் மேடானாலும்

கர்த்தரே வழிகாட்டி நடத்தினார்

இம்மானுவேல் அவா என்னோடிருந்துமே

இம்மட்டும் காத்ததால் ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்
போக்கும் வரத்தும் ஆபத்திலும்

காக்கும் தம் பலமான கரங்களே

நம்பிடுவேனே நான் அண்டிடுவேன் நித்தம்

நன்றி மறவாமல் ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்
நிந்தை சுமந்த நேரங்களில்

தந்தை தம் பெலமீந்து தேற்றினாரே

என்னென்ன துன்பங்கள் இன்னும் வந்தாலுமே

bன்மேலும் இயேசுவை ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்
சோதனையான வியாதிகளில்

வேதனை மரண படுக்கையிலும்

சித்தம் நிறைவேற முற்றும் குணமாக்கி

ஜீவன் அளித்ததால் ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்
பாக்கியமான இரட்சிப்புமே

பெற்றேன் இக்கனமான அழைப்புமே

ஆனந்த தைலத்தின் பல்ல அபிஷேகம்

அன்போடு ஈந்ததால் ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்
என்று வருவார் என் இயேசுவே

ஏங்கி என் மனமே தவித்திடுதே

கற்புள்ள கன்னிகை கூட்டமுடன் சேர்ந்து

கர்த்தரைக் கண்டு நான் ஸ்தோத்தரிப்பேன் - இயேசுவின்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com