• waytochurch.com logo
Song # 27423

இயேசு வருகிறார் வானத்தில் இயேசு தோன்றிடும்


நோவா காலம் போலவே

பாவமே பெருகுதே

தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே

நிதம் நம் வாழ்வை காத்திடுவோம் - வானத்தில்
தேவ பக்தி நிறைந்தோராய்

நீதியை காத்துமே

உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே

அவர் வருகைக்காய் காத்திருப்போம் - வானத்தில்
ஆவி ஆத்துமா சரீரத்தில்

பரிசுத்தம் காத்துமே

நேசரின் வருகை சமீபம் சமீபம்

நடுவானத்தில் சந்திப்போமே - வானத்தில்
தேவ வருகை நெருங்குதே

சபையில் கூடுவோம்

துதித்து மகிழ்ந்து ஆவியால் நிறைந்து

நிதம் ஆயத்தமாகிடுவோம் - வானத்தில்
வானம் பூமி மாறினும்

வார்த்தையோ மாறாதே

அமைதி நிலவும் சுகமே துளிரும்

புது மெய் வாழ்வு மலர்ந்திடும் - வானத்தில்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com