இயேசு நாமம் உயர்த்திடுவோம் இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்
அற்புத அடையாளம் நடந்திடும்
அதிசயங்கள் பல புரிந்திடும்
நோய்களும் பேய்களும்
விரட்டி ஓட்டிடும் நாமமிதே - இயேசு 
 இரட்சணியம் அளித்திடும் நாமமே
இரட்சகர் இயேசு வின் நாமமே
பாவங்கள் போக்கிடும்
பரமன் இயேசுவின் நாமமிதே - இயேசு 
 நேற்றும் இன்றும் மாறிடா
நேசர் இயேசுவின் நாமமே
தேனிலும் இனிமையாய்
தேவன் இயேசுவின் நாமமிதே - இயேசு 
 இருளின் பயங்கள் நீக்கிடும்
இனிமை வாழ்வினில் தங்கிடும்
மகிழ்ச்சியும் தந்திடும்
மகிபன் இயேசுவின் நாமமிதே - இயேசு 
 இயேசுவின் நாமம் பரிசுத்தம்
நாவுகள் யாவும் துதித்திடும்
உயர்ந்தது சிறந்ததே
உன்னதர் இயேசுவின் நாமமிதே - இயேசு 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter