• waytochurch.com logo
Song # 27437

இயேசு என்ற திரு நாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம்


வானிலும் பூவிலும் மேலான நாமம்

வல்லமையுள்ள நாமமது

தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது - இயேசு
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த

வீரமுள்ள திரு நாமமது

நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே - இயேசு
பாவத்திலே மாளும் பாவியை மீட்க

பாரினில் வந்த மெய் நாமமது

பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - இயேசு
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்

உன்னத தேவனின் நாமமது

உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது - இயேசு
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்

தாங்கி நடத்திடும் நாமமது

தடை முற்றும் அகற்றிடும் நாமமது - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com