• waytochurch.com logo
Song # 27441

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ


வருந்தி பாரங்கள் சுமந்த நீ

விரும்பி சிலுவை நோக்கியே பார்

அருமை ஆண்டவர் உனக்காக

சிறுமை அடைந்து உயிர் தந்தாரே - இயேசு
உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்

தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே

முள் முடி சூடினார் உன் வினைக்காய்

மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார் - இயேசு
மனந்திரும்பி மாறினாலோ

மறு பிறப்பை நீ கண்டடைவாய்

இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்

ஏற்றுக் கொள் கிடைக்கும் சமாதானமே - இயேசு
வல்லமை உண்டவர் இரத்தத்திலே

வியாதியின் வேரும் கூரும் முறியும்

கர்த்தரின் காயங்கள் தழும்புகள்

சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும் - இயேசு
சத்திய பரனே அழைக்கிறார்

நித்திய ஜீவனை ஈந்திடுவார்

இயேசு வாலாகாத தொன்றுலீல்லை

இப்போது உன் தேவை வேண்டிக்கொள்வாய் - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com