இம்மட்டும் கிருபை தந்த தேவா இனிமேலும் கிருபை தாரும் மூவா
சோதிக்கப்பட்ட தூய தேவா
சோதனையில் பெலன் தாரும் தேவா
துன்பங்கள் தொல்லை சூழ்கையிலே
இன்ப ஒளியை எனில் வீசியே - இருள் நீக்குமே - இம்மட்டும்
பக்தியில்லை நான் ஆராதிக்க
யுக்தியில்லை உம்மை நான் துதிக்க
சத்திய ஆவியின் வல்லமையால்
சக்தியைத் தாரும் உத்தமராய் - உம்மைத் துதிக்க - இம்மட்டும்
நன்றியால் உள்ளம் பூரிக்குதே
என்றுமே உம்மில் நான் நிற்கவே
அன்றும் உதிரம் சிந்தினதால்
இன்றும் உன் அன்பு பெருவெள்ளமாய் புரண்டோடுதே
இம்மட்டும்
சத்துருவான சாத்தான் என்னை
நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே
கர்த்தனே ஜெயம் பெற்றிடவே
சத்திய ஆவி வல்லமையை - என்னில் ஊற்றுமே - இம்மட்டும்
ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க
உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்
உம் நாமத்தினால் நான் ஜெயிப்பேன் - அல்லேலூயா
இம்மட்டும்