இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின் அற்புத சாட்சி கேட்டிடுவீர்
பட்சிக்கும் அக்கினி சோதனையா
பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே
பரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்
பாக்கியமென்று எண்ணிடுவேன் - என்ன
பல நாளாய் காத்து தவித்த உள்ளம்
இந்நாளில் பொங்கி பூரிக்குதே
பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை
பகிர்ந்திடுவேன் சபை நடுவில் - என்ன
என்னுள்ளம் தன்னில் ஊறிடும் ஊற்றே
உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே
உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
அன்று என் ஆவல் தீர்ந்திடுமே - என்ன