• waytochurch.com logo
Song # 27448

இன்ப துன்ப நேரத்திலும் அன்புள்ள இயேசுவைப் பார்


இன்பத்தினால் அகமகிழ்ந்து - கிலேசத்தினால் துக்கித்து

சிற்றின்பப் பேருலகில்

சிக்கிக்கொண்டு இருக்கும் போது - இன்ப
சோதனையில் பிடிபட்டு - இடுக்கனில் இருக்கும் போதும்

சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்

அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப
தோழரால் பகைக்கப்பட்டு - மனகிலேசம் அடையும் போதும்

உலகம் உன்னை இகழ்ச்சி செய்து

தன்னிடத்தை விட்டோட்டும் போதும் - இன்ப
அவர் தாமே சோதிக்கப்பட்டு - பாடு நமக்காய் அடையும் போதும்

அவர் சோதிக்கப்படும் நமக்கு

உதவி செய்ய வல்லவராம் - இன்ப
வறுமையினால் யாசித்து ஶி பாடுமிகப்படும்போது

சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி

உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் - இன்ப
கடுநோயால் பெலன் குன்றி - பெவீனத்தால் தள்ளாடி

ஜீவன் உனக்குக் கசப்பாகி

சாவை நீ விரும்பும் போதும் - இன்ப
பகைஞரால் கல்லெறியுண்டு - மரண நேரம் கிட்டும்போது

பக்தன் ஸ்தேவானைப் போல

தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப
நான் இயேசுவின் தரிசனத்தை - நிமிஷந் தோறும் காண்கிறதால்

நான் தான் பயப்படாதிரு

என்றவர் என்னை தேற்றுகிறார் - இன்ப

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com