• waytochurch.com logo
Song # 27449

இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே


பெரு வெள்ளத்தில் புகலிடம் நீரே

பெரும் கன்மலை நிhலே

வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே

வற்றாத நீரூற்றும் நீரே - இன்ப
ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்

ஊக்கமுடன் என்னைத் தேடி

கண்டு உணர்த்தி கை தாங்கி நடத்தி

கண்ணின் மனிபோலக் காத்தீர் - இன்ப
துஷ்ட மிரகம் என்னை எதிர்த்தும்

கஷ்டம் வராதென்னை காத்தீர்

மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்

கண்ணின் மணிபோலக் காத்தீர் - இன்ப
போராட்டமான போன வாழ்நாளில்

நீரோட்டம் மோதும் இன்னலில்

முற்று முடிய வெற்றி அளித்தீர்

குற்றம் குறை நீக்கிக் காத்தீர் - இன்ப
உந்தன் சரீர பெலவீன நேரம்

எந்தன் கிருபையே போதும்

என்று உரைத்து என்னை அணைத்து

எத்தனையோ நன்மை செய்தீர் - இன்ப
கல்வாரிப் பாதை தோல்வியில்லையே

கர்த்தாவே முன்னோடி நீரே

உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே

உன்னத வீட்டை அடைவேன் - இன்ப
அழைத்தவரே உண்மையுள்ளோரே

அப்படியே ஜெயம் ஈவார்

இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்

எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் - இன்ப

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com