இன்ப இயேசு என்னை என்றும் நடத்துவார் அவர் இனிய மார்பில் சாய்ந்திடுவேனே
காரிருள் மூடும் வேளையில்
கண்ணீரின் சோக பாதையில்
இனிய வேத வாக்கில் என்னை தேற்றுவார்
இன்ப மோட்ச வீட்டில் என்னை சேர்த்திடவே - இன்ப
யுத்தம் என்னை எதிர்க்கும் போதும்
யோர்தான் நதி புரளும் போதும்
சோர்ந்திடாமல் பெலனை தந்து காத்திடுவார்
சேனைகளின் கர்த்தர் யுத்தம் செய்வாரே - இன்ப
பஞ்சம் பசியும் நெருக்கம் வந்தாலும்
அஞ்சிடாமல் அவரை சார்வேனே
தஞ்சம் தந்து தாங்கும் அன்பரே
கெஞ்சும் ஏழை ஜெபம் கேட்பீரே - இன்ப
சோதனையில் தாங்கும் நாயகா
சேனையதிபன் இயேசு இரட்சகா
வேதனைகள் நீங்கும் பெலன் தருவீரே
நாதன் வரவில் நான் மகிழ்ந்து பாடவே - இன்ப