• waytochurch.com logo
Song # 27457

இணையில்லா நாமம் இயேசுவின் நாமம் இன்பமே தங்கும் இதயமே பொங்கும்


பாவத்தின் கூரை மறித்திடும் நாமம்

பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்

சாபப் பிசாசை ஜெயித்தவர் நாமம்

சந்ததம் ஓங்கிடும் நாமம்

பல நோய் பிணி தீர்க்கும் ஔஷதம் அதுவே

பக்தர்கள் அடைக்கல நாமம் - இணை
லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்

லோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்

ஜீவனை கொடுத்த இரட்சகர் நாமம்

ஜீவனோடெ ழுந்தவர் நாமம்

அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே

அணைந்திடா ஒளி திரு நாமம் - இணை
அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்

அன்பின் சொரூபி இயேசுவின் நாமம்

வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்

வேதனை தாங்கிடும் நாமம்

இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்

இன்றும்மை அழைத்திடும் நாமம் - இணை
அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்

அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்

விண்ணுலகோர் நம்பும் நாமம்

மண்ணுலகோர் நம்பும் நாமம்

மிகச் சீக்கிரம் வருவேன் என்று வாக்குரைத்த

மீட்பர் நல்மேய்பரின் நாமம் -இணை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com