• waytochurch.com logo
Song # 27463

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது


ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி

ஆர்வமுடன் கதறுகின்றது

உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்

கெம்பீரித்து சத்தமிடுது - ஆறு
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்

உண்மையிலே பாக்கியவான்கள்

தூய மனதுடன் துதிப்பார்கள்

துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆறு
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

உண்மையிலே பாக்கியவான்கள்

ஓடினாலும் களைப்படையார்

நடந்தாலும் சோர்வடையார் - ஆறு
கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்

களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்

வல்லமை மேலே வல்லமை கொண்டு

சீயோனைக் காண்பார்கள் - ஆறு
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட

உம்மிடத்தில் ஒருநாள் மேலானது

ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்

வாசலில் காத்திருப்பேன் - ஆறு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com