• waytochurch.com logo
Song # 27464

ஆராய்ந்து பாரும் தேவனே என்னை நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓ


உம் வார்த்தை கேட்டிடாமல்

குற்றங்கள் பல செய்தேன்

கர்த்தாவே அவற்றை காணத் தக்கதாய்

என்னில் வெளிச்சம் காட்டிடுமே - ஆராய்ந்து
மார்த்தாளைப் போலிருந்தேன்

வீணாக உழைத்திட்டேன் நான்

தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன்

பாதத்தில் இருக்க கற்றுக் கொண்டேன் - ஆராய்ந்து
வீண் வார்த்தை என் வாயினால்

நினைக்காமல் பேசுகிறேன்

என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும்

என் தூய வாழ்வை காத்துக் கொள்ள - ஆராய்ந்து
உம் தூய ஆவியாலே

துர் ஆசை நீங்கச் செய்யும்

உண்மை மனசாட்சி உன்னில் உண்டாக

உணர்வுள்ள இதயத்தை தந்தருளும் - ஆராய்ந்து
சுயம் என்னில் சாக வேண்டும்

நீர் என்னில் பெருக வேண்டும்

என் சித்தம் விரும்பேன் என்னையே பலியாய்

தந்தேன் உம் சேவை செய்திடவே - ஆராய்ந்து
ஆதி அன்பு என்னில் தாரும்

உம்மைப் போல் மாறிடவே

எண்ணில்லா நன்மைகள் இதுவரை செய்ததால்

அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் - ஆராய்ந்து

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com