ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன்
கல்வாரி மலையில் என் கடனை தீர்த்தார்
கன்மலையின் நீரூற்றால் தாகம் தீர்த்தீர்
பரிசுத்த ஆஜீயால் நிறைய செய்தீர் - ஆராதிப்பேன்
பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
பக்தி யுக்தி என்னில் அடைந்திடவே - ஆராதிப்பேன்
ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே - ஆராதிப்பேன்
அபிஷேகம் அருளிச் சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக் கொளுத்தும்
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும் - ஆராதிப்பேன்