ஆராதனை இந்த வேளை ஆண்டவரை தொழும் காலை
ஆவியுடன் நல் உண்மையுடன்
ஆராதிப்போம் அவர் நாமத்தையே
கூடிடுவோம் பணிந்திடுவோம்
கல்வாரி அன்பினை பாடிடுவோம் 
 திருரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த
திரு சபையில் தினம் சூடிடவே
தவறாமல் வேதம் ருசி பார்த்திட
திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம் 
 மெய் சமாதானம் கிருபையுடன்
மாறாத மீட்பர் மகிமையுடன்
மாசற்ற பேரின்பம் அன்பினிலே
மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter